உடனடி செய்தி

ஈரான் ஏவுகணையில் “இந்திய மக்களுக்கு நன்றி” – உலக நாடுகளை கவர்ந்த செய்தி

ஈரான் ஏவுகணையில் “இந்திய மக்களுக்கு நன்றி” – உலக நாடுகளை கவர்ந்த செய்தி
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேற்காசியாவில் போர் சூழ்நிலை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், ஈரான் தனது ஏவுகணைகளில் “இந்திய மக்களுக்கு நன்றி” என எழுதியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் உடன் ஏற்பட்ட மோதலிலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளிலும் பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும், ஈரான் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏவுகணைகளில் வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஈரான் தூதரகம் இந்தியா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு இந்தியா மக்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், போரை நிறுத்த வேண்டும் என நரேந்திர மோடி பலமுறை வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
13 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
13 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
13 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்