இங்கிலாந்தை கோலின்றி தடுத்த இந்தியா; உலக கோப்பை ஹாக்கியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியை 0-0 என்ற கணக்கில் 'டிரா' செய்த இந்திய பெண்கள் அணி, அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் நடைபெற்று வரும் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய பெண்கள் அணி 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் சீனாவுடன் 'டிரா' செய்த இந்தியா, அடுத்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்திய அணி, 7வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை எதிர்கொண்டது. அரையிறுதிக்கான அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்தியாவுக்கு 'டிரா' செய்தாலே போதுமானதாக இருந்தது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 23வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சலிமா அடித்த பந்தை இங்கிலாந்து கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்.
இங்கிலாந்து அணிக்கு கிடைத்த 11 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர். இதனால் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.
இந்த 'டிரா' மூலம் சீனா 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் 'டி' பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இங்கிலாந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றில் இந்திய அணி 'இ' பிரிவில் இடம்பெற்று, 'ஏ' பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதும். இந்த சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்