ஜப்பானை வீழ்த்தி பிரேசில் 'ரவுண்டு-16'க்கு முன்னேற்றம்: கடைசி நிமிட கோலில் திரில் வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-32' ஆட்டத்தில், பிரேசில் அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள பிரேசில் அணி, 17-வது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொண்டது. நட்சத்திர வீரர் நெய்மர் இந்த போட்டியில் களமிறங்கவில்லை.
போட்டியின் 29-வது நிமிடத்தில் கைஷு சானோ கோல் அடித்து ஜப்பானுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து பிரேசில் பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டாலும், முதல் பாதி முடிவில் ஜப்பான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் 56-வது நிமிடத்தில் கேஸ்மிரோ தலையால் முட்டி கோல் அடித்து பிரேசிலை சமநிலைக்கு கொண்டு வந்தார். அதன்பின் வினிசியஸ் ஜூனியரின் கோல் முயற்சி கோல் கம்பத்தில் மோதியதால் பிரேசிலுக்கு முன்னிலை கிடைக்கவில்லை.
போட்டி கூடுதல் நேரத்தை எட்டிய நிலையில், 90+5-வது நிமிடத்தில் புருனோ குய்மரேஸின் துல்லியமான பாஸை கோலாக மாற்றிய கேப்ரியல் மார்டினெல்லி, பிரேசிலுக்கு வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் 'ரவுண்டு-16' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த சுற்றில் ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. ஜப்பான் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
17 மணி நேரங்கள் முன்பு
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
2 நாட்கள் முன்பு
காலே டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்; இந்தியா 288/2
3 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா வெற்றி; வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்