கடைசி நிமிட கோலில் பிரேசில் வெற்றி: ஜப்பானின் உலகக் கோப்பை கனவு முடிவு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ரவுண்டு-32' போட்டியில், கடைசி நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோலின் உதவியுடன் பிரேசில் அணி ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள பிரேசில் அணி, 17-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது. நட்சத்திர வீரர் நெய்மர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கைஷு சானோ கோல் அடித்து ஜப்பானை முன்னிலைக்கு கொண்டு சென்றார். முதல் பாதி முழுவதும் பிரேசில் அதிக நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கோல் அடிக்க முடியாமல் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியது.
இரண்டாவது பாதியின் 56-வது நிமிடத்தில் கேஸ்மிரோ தலையால் முட்டி கோல் அடித்து பிரேசிலுக்கு சமநிலை ஏற்படுத்தினார். அதன்பின் வினிசியஸ் ஜூனியரின் கோல் முயற்சி கோல் கம்பத்தில் மோதியதால், முன்னிலை பெறும் வாய்ப்பு நழுவியது.
போட்டி கூடுதல் நேரத்தை எட்டிய நிலையில், 90+5-வது நிமிடத்தில் புருனோ குய்மரேஸின் துல்லியமான பாஸை கேப்ரியல் மார்டினெல்லி கோலாக மாற்றி பிரேசிலுக்கு 2-1 என்ற திரில் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பிரேசில் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறி, அடுத்த போட்டியில் ஐவரி கோஸ்ட் அல்லது நார்வே அணியை சந்திக்க உள்ளது. ஜப்பான் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியை காண 68,777 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
17 மணி நேரங்கள் முன்பு
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
2 நாட்கள் முன்பு
காலே டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்; இந்தியா 288/2
3 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா வெற்றி; வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்