உடனடி செய்தி

கேரள தேர்தல் 2026: பெண்களுக்கு மாதம் ₹3,000 உதவி – சபரிமலை விவகாரத்தில் CBI விசாரணை வாக்குறுதி

கேரள தேர்தல் 2026: பெண்களுக்கு மாதம் ₹3,000 உதவி – சபரிமலை விவகாரத்தில் CBI விசாரணை வாக்குறுதி
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. பெண்கள், வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் மத சார்ந்த விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டசபைக்கு வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ. தனது அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ₹3,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மாதம் ₹2,500 மதிப்புள்ள மளிகை மற்றும் மருத்துவ செலவுக்கான ‘ஆரோக்கியா’ ரீசார்ஜ் கார்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகளை மேம்படுத்த கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர CBI விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்வம் போர்டுகள் மாற்றி அமைக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தில் பக்தர்களின் பங்கு அதிகரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனுடன், சபரிமலை பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த உட்கட்டமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விழிஞ்ஞம் துறைமுகம் தொழிற்துறை மையமாக மேம்படுத்தப்பட்டு, திருவனந்தபுரம் முதல் கண்ணூர் வரை அதிவேக ரயில் திட்டமும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரத்தை ஐ.டி. மற்றும் புதுமை மையமாக மாற்றுவதே பா.ஜ.வின் முக்கிய இலக்காகும்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
12 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
12 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
13 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்