உடனடி செய்தி

கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் பிரக்ஞானந்தா புதிய சாதனை: முதல் இந்திய சாம்பியன்

கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் பிரக்ஞானந்தா புதிய சாதனை: முதல் இந்திய சாம்பியன்
வாஷிங்டன்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இறுதிப்போட்டியின் முதல் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களில் அமெரிக்காவின் பாபியானோ கரானாவிடம் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கினார். இதனால் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு அவருக்கு கடினமானதாக கருதப்பட்டது. எனினும், அடுத்ததாக நடைபெற்ற ராபிட் சுற்றில் பிரக்ஞானந்தா அபாரமாக செயல்பட்டு கரானாவை வீழ்த்தினார். இதன் மூலம் போட்டியில் முன்னிலை பெற்ற அவர், தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் ஆட்டங்களில் டிரா செய்து புள்ளிகளை தக்க வைத்துக் கொண்டார். இறுதியில் பிரக்ஞானந்தா 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் இந்தியாவுக்கான முதல் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார். பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பிலிப்பைன்ஸ்-அமெரிக்க வீரர் வெஸ்லி சோ வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
2 மணி நேரங்கள் முன்பு
பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதார் அபாரம்: இந்திய பவுலர்களின் பிடியில் இலங்கை
2 நாட்கள் முன்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
துருவ் ஜுரல் அபார சதம்: கொழும்பு டெஸ்டில் இந்தியா 503 ரன்கள் குவிப்பு
3 நாட்கள் முன்பு
உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவின் காஜல் தங்கம் வென்று அசத்தல்
உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவின் காஜல் தங்கம் வென்று அசத்தல்
6 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்