கோலியின் 9வது சதம் – பெங்களூரு ஜோராக வெற்றி
ராய்ப்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கட்டாவை வீழ்த்தியது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கினாலும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த கொல்கட்டா அணி 20 ஓவரில் 192/4 ரன்கள் எடுத்தது. ரகுவன்ஷி 71 ரன் மற்றும் ரிங்கு சிங் 49* ரன் அடித்து அணிக்கு வலுவான ஸ்கோரை அமைத்தனர்.
பின்னர் 193 ரன் இலக்கை துரத்திய பெங்களூரு அணியில் விராட் கோலி அபாரமாக விளையாடி 60 பந்தில் 105 ரன் குவித்தார். அவரின் இந்த சதம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பெங்களூரு அணி 19.1 ஓவரில் 194/4 ரன் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்த இன்னிங்ஸின் மூலம் கோலி டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன் என்ற மைல்கல்லையும் எட்டினார். மேலும், லீக் தொடரில் 9வது சதத்தையும் பதிவு செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்