உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

கோவை கோவில்களில் கண்காணிப்பு தீவிரம் | அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

கோவை கோவில்களில் கண்காணிப்பு தீவிரம் | அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
திருச்செந்தூரில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையில் மூன்று பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில், காரமடை அரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களிடம் தரிசன வசதிக்காக முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பக்தர்களின் குறைகளை நேரடியாக பதிவு செய்யும் வகையில் முக்கிய கோவில்களில் புகார் தொடர்பு விவரங்கள் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அறநிலையத்துறை தலைமை அலுவலகம் அல்லது கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
23 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்