கூப்பன் விநியோகம் சர்ச்சை: தேர்தல் அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் அவதி
சென்னை: தேர்தல் காலத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் விநியோகம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. கூட்டணி கட்சிகள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என அறிவித்துள்ளன. இந்த கூப்பனை பயன்படுத்தி மக்கள் பிரிஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கூப்பன்கள் அச்சிட்டு வீடுதோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளன.
தேர்தல் கமிஷன், இத்தகைய கூப்பன் விநியோகம் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தாலும், சில இடங்களில் விநியோகம் தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. போலீசார் முழுமையான ஒத்துழைப்பு அளிக்காததால், விநியோகத்தை கட்டுப்படுத்த தேர்தல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், கூப்பன் அச்சிடப்பட்ட அச்சகங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
1 நாட்கள் முன்பு
“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி
1 நாட்கள் முன்பு
100 நாளில் 904 ரெய்டுகள்; 322 உணவு நிறுவனங்கள் மூடல் – துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கை
2 நாட்கள் முன்பு
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்