உடனடி செய்தி

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி கைது: திருப்பூர் தொடர்பு வெளிச்சம்

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி கைது: திருப்பூர் தொடர்பு வெளிச்சம்
புதுடில்லி: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் டில்லி நகரின் பல பகுதிகளில் தேச விரோத போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், வங்கதேசத்தை சேர்ந்த சில இளைஞர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், தமிழகத்தின் திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டு நபர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர்களின் தகவலின் அடிப்படையில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவிலும் மேலும் இரண்டு வங்கதேச நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஷபீர் அகமது லோன் என்பவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஷபீர் அகமது லோன், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் வங்கதேச இளைஞர்களை மூளைச்சலவை செய்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கூடுதல் கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக, உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் பகுதியில் ஷபீர் அகமது லோன் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், இவரை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
19 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
19 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
19 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்