ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை; மூடுவிழாவை நோக்கி 2,482 அரசு பள்ளிகள் Latest Tamil News Powered by:PlayStream தமிழகத்தில், 31ஆயிரத்து, 343 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 16
தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கையுடன் 2,482 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 31,343 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 16.99 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கலால் பல பெற்றோர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி மாறி வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, உயர்கல்விக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு கல்வியாண்டில் ஒரு மாணவர் கூட சேராததால், 48 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 255 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது 1 முதல் 9 மாணவர்கள் மட்டுமே படிக்கும் 2,482 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் திருப்பூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிகளவில் இத்தகைய பள்ளிகள் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒரே ஒரு ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், மாணவர் சேர்க்கை மேலும் குறைந்தால் எதிர்காலத்தில் இப்பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கற்பித்தல் தரம் மற்றும் மாணவர் சேர்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: உணவுப் பொருள் தடைக்கு எதிர்ப்பு
17 மணி நேரங்கள் முன்பு
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தை தடுக்க கோரிக்கை: ஹிந்து முன்னணி போலீசில் நடவடிக்கை வலியுறுத்தல்
17 மணி நேரங்கள் முன்பு
தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: சீரக சம்பா கிலோ ரூ.180-ஐ எட்டியது
1 நாட்கள் முன்பு
சென்னையில் மீண்டும் பைக் ரேஸ் அட்டகாசம்: சாலை தடுப்பை இழுத்துச் சென்ற இளைஞர்கள்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்