பலூசிஸ்தான் சுதந்திரம் என அறிவிப்பு; கொடி, தேசிய கீதம், நாணயம் வெளியீடு
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் சுதந்திரக் கோரிக்கை மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. 'பலூசிஸ்தான் குடியரசு' என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பலூச் விடுதலை அமைப்பு தாங்கள் சுதந்திரம் பெற்றதாகக் கூறி, தேசிய கொடி, தேசிய கீதம் மற்றும் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், 'பலோச்சி பாலுஸ்' என்ற பெயரில் புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையில் இருந்த சில பலூச் மற்றும் பஷ்தூன் இனத்தவர்கள் தங்களுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தான் படைகளை முழுமையாக வெளியேற்றும் நோக்கில் பெருமளவு ஆதரவாளர்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலூசிஸ்தானை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், புதுடெல்லியில் தூதரகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச சட்டப்படி பலூசிஸ்தான் இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. புதிய நாடாக அங்கீகாரம் பெற ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஒப்புதலும், பிற நாடுகளின் அதிகாரப்பூர்வ அங்கீகாரமும் அவசியமாகும். தற்போதைய நிலவரப்படி எந்த நாடும் பலூசிஸ்தானை சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் 10 பொதுமக்கள் மற்றும் 2 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
8 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
8 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்