செய்திகள்
⚡ உடனடி செய்தி
ரூ.100 கோடி கோவில் நிலம் அபகரிப்பு முயற்சி: சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு
பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் தொடர்பான பத்திரப்பதிவு முறைகேடு விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தொடர்பில்லாத அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி சட்டவிரோதமாக கிரயப்பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பழநி பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடைபெற்றது உறுதியானதை அடுத்து, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் மற்றும் நிலம் வாங்கியதாக கூறப்படும் வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. உத்தரவின் பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கோவில் சொத்துகளை பாதுகாப்பது தொடர்பாக இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றிய குப்பை: விமான பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்
1 மணி நேரங்கள் முன்பு
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் இந்தியா அசத்தல்; 5 தங்கப் பதக்கங்களுடன் உலக முதலிடம்
1 மணி நேரங்கள் முன்பு
போதைப்பொருள் ஒழிப்பில் தென் மாநிலங்கள் இணைப்பு; 'ஆப்பரேஷன் துபான்' திட்டம் விரிவாக்கம்
2 நாட்கள் முன்பு
'போதையில்லா தமிழகம்' மாநாடு இன்று பொள்ளாச்சியில்; 'வீ த லீடர்ஸ்' சார்பில் அண்ணாமலை பங்கேற்பு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்