தமிழகத்தில் 4°C வரை வெப்பம் உயரும்; பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடரும் நிலையில், இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 'ஆரஞ்சு அலர்ட்' மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வெப்ப அலை தொடரும் என்றும், அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஷா – மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த சில நாட்களில் வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
8 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
8 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்