மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு தீவிரம்; டெல்டா மாவட்டங்களில் எதிர்ப்பு வலுத்தது
தமிழகத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் மாநில அரசு மீண்டும் மணல் குவாரிகளை திறக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்காக கடலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, மணல் குவாரிகளில் முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த புகார்களைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், 2023ஆம் ஆண்டு மணல் குவாரிகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது குவாரிகளை மீண்டும் திறக்கும் நிலையில், நீர்வளத் துறையே நேரடியாக குவாரிகளை நிர்வகிக்க வேண்டும், மணல் விற்பனை முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெற வேண்டும், மணல் அள்ள இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது, ஒவ்வொரு குவாரியிலும் 12 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே மணல் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை சுற்றுச்சூழல் துறை விதித்துள்ளது.
இதற்கிடையில், மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, பாசனத்திற்கும் குடிநீர் விநியோகத்திற்கும் சிக்கல் ஏற்படும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வானத்தின் கண் இஓஎஸ்-05 வெற்றி: ஜிஎஸ்எல்வி எப்-17 மூலம் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
7 மணி நேரங்கள் முன்பு
கோவில் சொத்து விவரங்கள் 90 நாட்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட உத்தரவு
7 மணி நேரங்கள் முன்பு
கோவில் நிதி ஹிந்து சமூக நலனுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
7 மணி நேரங்கள் முன்பு
நடுபழனி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத முருகர் சிலை திருட்டு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்