செய்திகள்
⚡ உடனடி செய்தி
பொள்ளாச்சியில் ஜூலை 12ல் 'வீ தி லீடர்ஸ்' முதல் மாநாடு: அண்ணாமலை அறிவிப்பு
பா.ஜ.கவிலிருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநில மாநாடு ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மாநிலத்தில் மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். ஒரு லட்சம் மக்களுக்கு 290 முதல் 310 மருத்துவமனை படுக்கைகள் இருக்க வேண்டும் என்றாலும், தற்போது சுமார் 130 படுக்கைகள் மட்டுமே உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நோக்கம் அரசியல் மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் நேர்மையான மற்றும் பொறுப்புள்ள தலைவர்களை உருவாக்குவதாகும் என்றார். மாநில அளவிலான மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், கிராம மட்டத்திலிருந்தே நல்ல தலைமை உருவாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நோக்கத்தை முன்னிறுத்தி, ஜூலை 12 மாலை 4 மணிக்கு பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
100% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான விக்ரம்-1 வெற்றி
5 மணி நேரங்கள் முன்பு
தவெகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை? அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
5 மணி நேரங்கள் முன்பு
பழநி கோவில் நில மோசடி: பல மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
5 மணி நேரங்கள் முன்பு
அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்த த.வெ.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
5 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்