உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

ரூ.634 கோடி பணி நியமன லஞ்ச புகார்: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு; ஐகோர்ட்டில் அரசு தகவல்

ரூ.634 கோடி பணி நியமன லஞ்ச புகார்: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு; ஐகோர்ட்டில் அரசு தகவல்
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன லஞ்ச முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டுகளில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதில் பெருமளவு லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத் துறை (ED) புகார் எழுப்பியிருந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், பிப்ரவரி மாதத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்தாததாக குற்றம்சாட்டி நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் தமிழக அரசு தரப்பில் மறு ஆய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்கு விசாரணையின் போது, பணி நியமன முறைகேடு தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை FIR பதிவு செய்துள்ளதாக அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அரசின் மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் ஜூன் 23ஆம் தேதி வரை, பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
4 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
4 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்