உடனடி செய்தி

டென்னிஸ் உலகில் கவனம் ஈர்க்கும் ஆன்ட்ரீவா; காலிறுதிக்கு முன்னேற்றம்

டென்னிஸ் உலகில் கவனம் ஈர்க்கும் ஆன்ட்ரீவா; காலிறுதிக்கு முன்னேற்றம்
பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுவிட்சர்லாந்தின் ஜில் டெய்ச்மானை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்ற அவர், தனது கிராண்ட்ஸ்லாம் பயணத்தில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு பெண்கள் பிரிவு போட்டியில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா, ஆஸ்திரியாவின் அனஸ்தசியா பொடபோவாவை கடுமையான போராட்டத்துக்கு பிறகு 6-4, 2-6, 7-6 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் இடம்பிடித்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூபலெவ், செக் குடியரசின் ஜகுப் மென்சிக்கிடம் ஐந்து செட்கள் நீண்ட போராட்டத்தில் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் பிரான்சின் ஜோயாவோ பொன்செகா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்திய ஜூனியர் பிரிவில் மாயா ரேவதி தோல்வியடைந்த நிலையில், அர்னாவ் பாபர்கர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவுக்கு பெருமை; 8வது இடம் பிடித்த சிந்து
பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவுக்கு பெருமை; 8வது இடம் பிடித்த சிந்து
23 மணி நேரங்கள் முன்பு
கோப்பை கொண்டாட்டம் சர்ச்சை: அர்ஜென்டினா, ஸ்பெயின் வீரர்கள் மோதல்
கோப்பை கொண்டாட்டம் சர்ச்சை: அர்ஜென்டினா, ஸ்பெயின் வீரர்கள் மோதல்
1 நாட்கள் முன்பு
ஸ்பெயின் உலக சாம்பியன்! அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பை வென்றது
ஸ்பெயின் உலக சாம்பியன்! அர்ஜென்டினாவை 1-0 என வீழ்த்தி கோப்பை வென்றது
2 நாட்கள் முன்பு
காயத்தால் எதிரணி விலகல்; ஜப்பான் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து
காயத்தால் எதிரணி விலகல்; ஜப்பான் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்