திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: சட்டத்தை மதிக்கவில்லை என தவெக அரசை விமர்சித்த ஹிந்து முன்னணி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் கிரிவலப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியது.
ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற கிரிவலத்தில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், வேல் ஏந்தியும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக கடந்த 40 ஆண்டுகளாக ஹிந்து முன்னணி போராடி வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருந்தாலும், முந்தைய அரசும் அதை அமல்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தாமல் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்திருப்பது சட்டத்தை மதிக்காத அணுகுமுறையாகும் என்று அவர் விமர்சித்தார்.
இடைத்தேர்தல் பிரசாரத்தில் கார்த்திகை தீபம் தொடர்பான விவகாரம் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே அரசு தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அத்துடன், அறநிலையத் துறையில் நடைபெறும்தாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
அரசு பள்ளி விடுதியில் அதிர்ச்சி: இரண்டு மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்; பெண் ஊழியர் கைது
15 மணி நேரங்கள் முன்பு
விமர்சனங்களை ஒடுக்க முயற்சியா? த.வெ.க. அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சிப்பு
15 மணி நேரங்கள் முன்பு
சீரற்ற மின் விநியோகத்தால் திணறும் தமிழகம்; தொழிற்சாலைகள் முதல் வீட்டு உபகரணங்கள் வரை கடும் பாதிப்பு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்