உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவின் காஜல் தங்கம் வென்று அசத்தல்
பிரடிஸ்லாவா: சுலோவாக்கியாவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் காஜல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பெண்களுக்கான பிரீஸ்டைல் 76 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் பைபரை எதிர்கொண்ட காஜல், 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் சீனாவின் ஜிங்ரு சன்னை எதிர்கொண்ட காஜல், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டும் 72 கிலோ பிரிவில் காஜல் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
62 கிலோ பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சவிதா, ஜப்பானின் சகுராவிடம் 2-12 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
68 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மான்சி, ரஷ்யாவின் ஈவன்கெலியாவை 12-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சீனாவின் சென்லிங் ஜாங்கை எதிர்கொள்கிறார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் கோமல், ஹங்கேரியின் எடா பலாசை எதிர்கொள்ள உள்ளார். 55 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் களமிறங்கிய ஹன்சிகா, சீனாவின் மெய்லினிடம் 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இங்கிலாந்தை கோலின்றி தடுத்த இந்தியா; உலக கோப்பை ஹாக்கியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
1 நாட்கள் முன்பு
பாகிஸ்தானை 5-3 என வீழ்த்திய இந்தியா; உலக கோப்பை ஹாக்கியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2 நாட்கள் முன்பு
இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
3 நாட்கள் முன்பு
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
5 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்