உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி – உருகுவே வெளியேற்றம்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்பெயின் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் உருகுவே அணி தொடரிலிருந்து வெளியேறியது.
லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் மொத்தம் 7 புள்ளிகள் பெற்ற ஸ்பெயின் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. மறுபுறம், இரண்டு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பெற்ற உருகுவே அணி வெளியேறியது.
இதனிடையே, கனடாவின் வான்கூவரில் நடைபெற்ற 'ஜி' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. டிராஸ்சார்டு இரண்டு கோல்கள் அடித்ததுடன், டி புரூய்ன், லுகாகு மற்றும் சலேமேக்கர்ஸ் தலா ஒரு கோல் பதிவு செய்தனர்.
அமெரிக்காவின் சியாட்டிலில் நடைபெற்ற மற்றொரு 'ஜி' பிரிவு ஆட்டத்தில் எகிப்து மற்றும் ஈரான் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன.
லீக் சுற்று முடிவில் தலா 5 புள்ளிகள் பெற்ற பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. மூன்று போட்டிகளிலும் டிரா செய்த ஈரான் அணி, சிறந்த மூன்றாவது இட அணிகளில் ஒன்றாகத் தேர்வாகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறது. நியூசிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய பெண்கள் ஹாக்கி அணி அதிரடி; தென் ஆப்ரிக்காவை 6-1 என வீழ்த்தி அபார வெற்றி
17 மணி நேரங்கள் முன்பு
காலே டெஸ்ட்: 460 ரன் குவித்த இந்தியா; தேவ்தத் 167, ஜுரெல் அரைசதம்
2 நாட்கள் முன்பு
காலே டெஸ்ட்: தேவ்தத் படிக்கல் அபார சதம்; இந்தியா 288/2
3 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியா வெற்றி; வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்