Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
விளையாட்டு • 02 Feb 2026

ATP, WTA டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச் ‘நம்பர்-3’, ரிபாகினா அதிரடி முன்னேற்றம்

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஒற்றையர் பிரிவில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறினார். இதனால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
முதலிடத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் தொடர, இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதன்முறையாக கைப்பற்றிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, 5வது இடத்தில் இருந்து ‘நம்பர்-3’ இடத்திற்கு முன்னேறினார். அரினா சபலென்கா மற்றும் இகா ஸ்வியாடெக் முதலிரண்டு இடங்களில் நிலைத்துள்ளனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்