விளையாட்டு •
05 Feb 2026
19 வயது உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 10வது முறையாக பைனலுக்கு இந்தியா
ஹராரேயில் நடைபெற்ற 19 வயது உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 310 ரன் என்ற பெரிய இலக்கை 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புடன் சேஸ் செய்து, உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய சேஸ் சாதனையை இந்தியா பதிவு செய்தது.
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி தொடக்கம், ஆரோன் ஜார்ஜின் சதம் மற்றும் ஆயுஷ் மாத்ரேயின் அரைசதம் ஆகியவை இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதன் மூலம் இந்தியா, 19 வயது உலகக் கோப்பை பைனலுக்கு 10வது முறையாக முன்னேறி, நாளை இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
- நமது நிருபர் -
⬅ முந்தைய