Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 08 Mar 2026

ஈரான் போர் கப்பலுக்கு கொச்சி துறைமுகத்தில் அனுமதி: மனிதாபிமான முடிவு என அமைச்சர் ஜெய்சங்கர்

ஈரான் நாட்டின் ‘ஐரிஸ் லாவன்’ போர் கப்பலை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளித்தது மனிதாபிமான அடிப்படையில் எடுத்த சரியான முடிவு என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், ஈரான் நாட்டின் இரண்டு போர் கப்பல்கள் இந்தியாவில் நடைபெற்ற ‘மிலன்’ கடற்படை பயிற்சியில் பங்கேற்றன. அந்த பயிற்சி முடிந்து திரும்பும் போது பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக கப்பல்கள் சிக்கலில் சிக்கின.

அதில் ‘ஐரிஸ் டீனா’ என்ற போர் கப்பல் இலங்கையின் காலி துறைமுகம் வழியாக சென்ற போது அமெரிக்க கடற்படையால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 87 ஈரானிய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

மற்றொரு கப்பலான ‘ஐரிஸ் லாவன்’ ஈரான் திரும்பும் வழியில் பாதுகாப்பு சிக்கலை சந்தித்ததால் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியது. இதனை மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு பரிசீலித்து அனுமதி வழங்கியது. அதன் பிறகு அந்த கப்பல் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

டில்லியில் நடைபெற்ற ‘ரெய்சினா’ மாநாட்டில் இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சட்ட ரீதியான சிக்கல்கள் இருந்தாலும் மனிதாபிமான கோணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது சரியான தீர்மானம் என்றும் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்