Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 08 Mar 2026

டிரம்ப் கடும் பதில்: “போரில் ஏற்கனவே வெற்றி; பிரிட்டன் ஆதரவு தேவையில்லை”

ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து பிரிட்டன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “நாங்கள் ஏற்கனவே போரில் வெற்றி பெற்று வருகிறோம். இப்போது உங்கள் ஆதரவு தேவையில்லை. ஆனால் இதை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்வோம்” என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் கடுமையாக தெரிவித்தார்.

மேலும் நிருபர்களிடம் பேசிய அவர், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாகவும், 44 கப்பல்கள் மற்றும் பல்வேறு ராணுவ அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஈரான் உருவாக்கி வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் உற்பத்தி மையங்களும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானின் ராணுவ திறன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்டை நாடுகளுக்கு ஏவுகணை தாக்குதல்கள் குறையும் என்றும் டிரம்ப் கூறினார். மேலும், ஈரானின் பல்வேறு முக்கிய தலைமை அமைப்புகளும் தாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்