Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 08 Mar 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.17: 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திருவிழா

மதுரை நகரின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில்களில் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக 2009 ஏப்ரல் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 12 ஆண்டுகளுக்குள் மீண்டும் நடத்தப்பட வேண்டியிருந்தாலும், 2018ல் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சீரமைப்பு பணிகள் தாமதமானதால் கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கோயிலில் பல திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி உள்ளிட்ட மொத்தம் ரூ.32.28 கோடி மதிப்பில் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.35.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோயில் திருவிழாக்களுக்கு இடையூறு ஏற்படாமல் வரும் செப்டம்பர் 17ம் தேதி (ஆவணி 31) காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்