உடனடி செய்தி

ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்

ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
தமிழகத்தின் பாரம்பரிய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை பாதுகாத்து வரும் மாமல்லபுரம் அரசு கட்டட மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி, தற்போது கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளால் சிக்கலில் சிக்கியுள்ளது. 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், ஆசியாவின் ஒரே மரபுக்கலைக் கல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது. கற்சிற்பம், சுதைச்சிற்பம், உலோகச் சிற்பம், மரச்சிற்பம், மரபு கட்டடக்கலை மற்றும் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், கல்லூரியில் மொத்தம் 67 பணியிடங்கள் இருந்தும், தற்போது மூன்று விரிவுரையாளர்கள் மற்றும் இரண்டு பயிற்றுநர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 50-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக நிரந்தர முதல்வர் நியமிக்கப்படாததும் கவலை அளிக்கிறது. 227 மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரியில், 90 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பழைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். மரபுக் கலைகளை காப்பாற்றும் முக்கிய கல்வி மையமாக விளங்கும் இந்த கல்லூரியில், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, புதிய கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
3 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
3 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
3 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்