தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், அனைத்து மாணவர்களுக்கும் அரங்கிற்குள் அமர இடம் வழங்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பெரிய அரங்கை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், எந்த மாணவரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
தமிழக மாணவர்களின் ஒழுக்கம், பொறுமை மற்றும் பண்பாடு இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று கூறிய அவர், இன்றைய பட்டதாரிகள் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலத்தின் பலமும் ஆற்றலும் என்றும் பாராட்டினார்.
மேலும், 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் 'விக்சித் பாரத்' இலக்கை அடைய இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும், "விக்சித் பாரத் உருவாகும் பாதை, விக்சித் தமிழ்நாடு வழியாகவே செல்கிறது" எனக் குறிப்பிட்டார்.
மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வருவேன் என்றும், சமூக முன்னேற்றத்தில் இளைஞர்கள் தங்களது அறிவு மற்றும் திறமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
24 Sep 2026
2029க்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா: டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்த அமித் ஷா
24 Sep 2026
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்