உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு

'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
சென்னையில் நடைபெற்ற 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்திற்கு இடம் வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (இ.கம்யூ.) தலைமையிடம், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை தி.நகரில் உள்ள இ.கம்யூ. மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், போராட்டத்தின் போது சிலர் 'நீட்' விவகாரத்தைத் தாண்டி தமிழக முதல்வர் விஜய் மற்றும் மாநில அரசை விமர்சித்து முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், போராட்டம் அரசியல் ரீதியாக வேறு திசைக்கு மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.கம்யூ. கட்சியிடம் த.வெ.க. மேலிடம் விளக்கம் கேட்டதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இ.கம்யூ. வட்டாரங்கள் கூறுகையில், ஆரம்பத்தில் போராட்டம் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தாலும், பின்னர் சிலர் முதல்வர் விஜய் மற்றும் மாநில அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்ததால் நிலைமை மாறியதாக தெரிவித்துள்ளனர். இறுதி நாளில் போராட்டத்தின் போக்கு மாறியதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, "கூட்டணியில் இருந்தாலும் கருத்துச் சுதந்திரம் உள்ளது; இதுபோன்ற விஷயங்களுக்கு ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்?" என்ற கருத்தும் இ.கம்யூ. கட்சிக்குள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
23 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
23 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்