உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது

பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது
பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, அறக்கட்டளை தொடர்புடைய முருகதாஸ், அன்வர்தீன் உள்ளிட்ட நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நில மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை சார் பதிவாளர், கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த் துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள், சாட்சிகள், புரோக்கர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட 82 பேரிடம் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி நிலம் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கில், மேலும் பலர் விசாரணை வளையத்துக்குள் வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
2 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
2 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
2 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்