செய்திகள்
⚡ உடனடி செய்தி
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் அனஹத் சிங்; 'வரலாற்று சாதனை' என பிரதமர் மோடி பாராட்டு
கனடாவின் ஒன்டாரியோவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த அபார வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் எகிப்தின் ருகையா சலீமை எதிர்கொண்ட அனஹத் சிங், 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பை அனஹத் சிங் பெற்றுள்ளார். மேலும், 2011 முதல் தொடர்ச்சியாக எகிப்து வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தப் போட்டியில் அந்த தொடர் ஆதிக்கத்துக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதற்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா 21 ஆண்டுகளுக்கு முன்பு உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அனஹத் சிங்கின் சாதனையைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக வலைதள பதிவில், "உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அனஹத் சிங்கை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வரலாற்றுச் சாதனை, இந்திய இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்