டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு
தலைநகர் டில்லியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையில் இருந்து ஆரஞ்சு, பின்னர் சிவப்பு எச்சரிக்கையாக உயர்த்தியது.
கன்னாட் பிளேஸ், ஜன்பத், பாரத் மண்டபம் சாலை, மதுரா சாலை, காளிந்தி குஞ்ச் உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. சதார் பஜாரில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
கிரேட்டர் கைலாஷ், ஹவுஸ் காஸ், ஆர்.கே.புரம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் நிலவியது. மழை காரணமாக பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் மேலடுக்குக் காற்றுச் சுழற்சிகளின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆகஸ்ட் 3 வரை டில்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கிழக்கு டில்லியில் யமுனை ஆற்றில் நான்கு பேர் நீரில் மூழ்கிய சம்பவத்தில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
2 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
2 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
2 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்