ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள நிவரான்பூர் பகுதியில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக முதலில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் பின்னர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக கோட்வாலி காவல் நிலையத்தில் வைத்து மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, சயீப் என்ற குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் கழிப்பறை செல்ல வேண்டும் என்று கூறி ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் பேருந்தில் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சன்ஹோ சுங்கச் சாவடி அருகே அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அப்போது, போலீசாரின் துப்பாக்கியை பறித்த சயீப், மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலடி நடவடிக்கையில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த, சயீப்பின் காலில் காயம் ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் பராஸ் ரானா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்