செய்திகள்
⚡ உடனடி செய்தி
பள்ளி வளாக ஜெபக்கூட்டத்திற்கு எதிர்ப்பு: திருநெல்வேலியில் ஹிந்து முன்னணியினர் 78 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து முன்னணியினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஜெபக்கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் மத சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற அரசு உத்தரவை மேற்கோள் காட்டி, ஹிந்து முன்னணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஜெபக்கூட்டம் தொடர்ந்ததைத் தொடர்ந்து, சுடலை ஆண்டவர் கோவில் முன்பிருந்து பள்ளி வளாகம் நோக்கி பேரணியாக செல்ல ஹிந்து முன்னணியினர் முயன்றனர். மாநில துணைத்தலைவர் டாக்டர் அரசுராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியை நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, மொத்தம் 78 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், அரசு உத்தரவை மீறி ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை கண்டித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்