செய்திகள்
⚡ உடனடி செய்தி
டாஸ்மாக் கடைகளில் 50% தனியார்மயம்? தமிழக அரசு தீவிர ஆலோசனை
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனையில் மாற்றங்களை கொண்டு வர அரசு பரிசீலித்து வருகிறது. தற்போதுள்ள 4,048 டாஸ்மாக் கடைகளில் சுமார் 50 சதவீதத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்க அனுமதிக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தரப்பில், போட்டி அதிகரிப்பதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூல், முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்காக சட்டத் திருத்தம் மேற்கொள்ளும் வாய்ப்பும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேசமயம், டாஸ்மாக் பணியாளர் சங்கம் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார்மயம் மதுபான விற்பனையை அதிகரிக்கும் என்றும், முழுமையான மதுவிலக்கை நோக்கி அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
2025–26ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ஆயத்தீர்வை மற்றும் வரி வருவாயாக ₹50,000 கோடிக்கும் மேற்பட்ட வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்