தொகுதி மறுவரையறை மசோதா அடுத்த வாரம் பார்லிமென்டில்? மத்திய அரசு தீவிரம்
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த வாரத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான முக்கிய மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. ஆரம்ப இரு வாரங்களில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் அலுவல்கள் பலமுறை பாதிக்கப்பட்டன. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த தடியடி சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இந்த சூழலிலும், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா - 2026 மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா - 2026 ஆகியவற்றை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
அடுத்த கட்டமாக, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) திருத்த மசோதா - 2026-ஐ அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதனுடன், மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்கு பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு அவசியமாக இருப்பதால், மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு எவ்வாறு ஆதரவை திரட்டும் என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்