விளையாட்டு
⚡ உடனடி செய்தி
காமன்வெல்த் 2026: ஜூடோவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் இரு தங்கம்; அஷ்மிதா டெ, ஹர்ஷ் சிங் அசத்தல்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2026 விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஜூடோவில் ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் அஷ்மிதா டெவும், ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஷ் சிங்கும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
22 வயதான அஷ்மிதா டெ, மகளிர் இறுதிப்போட்டியில் கனடாவின் ஹைடி குவாச்சை எதிர்கொண்டார். கடும் போட்டியாக அமைந்த ஆட்டத்தில் இருவரும் சமநிலையில் இருந்ததால், கோல்டன் ஸ்கோர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார். அதில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அஷ்மிதா டெ, காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
அதற்கு முன் அரையிறுதியில் ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனைவும் கோல்டன் ஸ்கோர் முறையிலேயே வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஷ் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஜூடோ போட்டியில் ஒரே நாளில் இந்தியா இரண்டு தங்கங்களை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தது.
இந்த வெற்றிகளுடன் காமன்வெல்த் 2026 பதக்கப் பட்டியலில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 10 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று சிறப்பான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்