உடனடி செய்தி

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் பெங்களூரு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. அதன் பின்னணி, மனித உரிமைகளை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இயங்கி வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும் அமைப்பு , அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் எண்ணங்களை மற்ற நாடுகளில் மறைமுகமாக செயல்படுத்தும் அடியாள் போல செயல்படுகிறது. இதுபோன்ற அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து பணம் கொண்டு வருவதற்கு சில வரைமுறைகளை கொண்டு வந்தது மத்திய அரசு. அதாவது ஒவ்வொரு வருடமும் எவ்வளுவு பணம் வந்தது காய் எந்த நோக்கத்திற்கு பயன் படுத்தப்பட்டது என்பதை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை பின்பற்றாததால் இந்த அமைப்பிற்கு வெளி நாட்டிலிருந்து பணம் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பு இரண்டு வர்த்தக நிறுவனகளை நிறுவி அதன் மூலம் 36 கோடி வெளிநாட்டுப்பணத்தை பெற்றுள்ளது. அதை விசாரிக்கவே அமலாக்கத்துறை இந்த அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது. இப்படி குறுக்கு வழியிலாவது பணத்தை பெற்று நமது நாட்டில் மனித உரிமையை காப்பாற்ற பாடுபடுகிறது என்பது வியப்பு. அதே சமயம் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் புண்ணியவான்கள் யார் என்று நினைத்தால் மலைப்பு.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
4 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
4 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
4 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்