உடனடி செய்தி

பஞ்சாப் தசரா விழாவில் கொடுமை: ரயில் மோதி 50க்கும் மேற்பட்டோர் பலி

பஞ்சாப் தசரா விழாவில்  கொடுமை: ரயில் மோதி 50க்கும் மேற்பட்டோர் பலி
சண்டிகர்: பஞ்சாப் அருகே செளரா பஸார் பகுதியில் தசரா விழாவில் ராவணன் வதம் நடைபெற்று கொண்டிருந்தது. அந்நேரம் ராவணன் உருவபொம்மையை எரித்தும், இன்னொரு பக்கம் வான வேடிக்கை பட்டாசுகளும் வெடித்து கொண்டிருந்தனர். மக்கள் அருகே தீ வந்து விழுந்ததைப் பார்த்ததும் பயத்தில் ரயில் தண்டவாளத்தை அறியாமல் அதன்மீது ஏறி ஓடியவர்கள் மீது அமிர்தசரஸ் நோக்கி வந்த ரயில் மோதி பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில் விபத்தில் பலியாகியவர்களுக்கு பாரத பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளனர். இரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக தலா ரூ. 5லட்சம் வழங்ககப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. amritsar dussehra rail accident   காங்கிரஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இந்த தசரா விழாவை காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் ஏற்பாடு செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வீரர் மற்றும் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிதான் இதன் சிறப்பு விருந்தினர் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சரியான அனுமதி பெற்று நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது. விபத்து நடந்தபோது சித்துவின் மனைவி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தாராம். விபத்தைப் பற்றி கவனிக்காமல் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
5 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
5 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
5 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்