ஜம்மு மற்றும் காஷ்மீரில் கல்வீசித் தாக்கினால் கடுமையான நடவடிக்கை - பிபின் ராவத்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தலைமைத்தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை.
காஷ்மீரின் அனந்த்நாக்கில் எல்லைப் பகுதியில் சாலை கட்டுமான பணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்த அதிரடிப் படை வீரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில். உத்தரகாண்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ராஜேந்திர சிங் தலையில் அடிபட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியது: காஷ்மீரின் வளர்ச்சியை சீர்குலைக்கும் விதமாக இது வேண்டுமென்றே பாகிஸ்தான் ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் இங்கு எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். பலமுனைத் தாக்குதல் நடத்தவும் முழு பலத்துடன் காத்திருக்கிறோம்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்