சாயல்குடியில் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு மக்கள் எதிர்ப்பு – பிரசாரத்தில் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகிலுள்ள ஒச்சத்தேவன் கோட்டை, கூரான்கோட்டை, வெள்ளம்பல் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிக்க சென்ற அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராஜ கண்ணப்பன், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி பிரச்சினைகளை தீர்க்காததற்காக கிராம மக்கள் ஆவேசம் அடைந்தனர். குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி இல்லாமை, போக்குவரத்து சிக்கல்கள், தெருவிளக்கு மற்றும் மின்சார குறைபாடுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர்.
ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சர் மீது கேள்வி மழை பொழிந்தனர். இதனால் அவர் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சருடன் வந்த கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. நிலைமை மோசமடைந்ததால், அமைச்சர் அங்கிருந்து பிரசாரத்தை நிறுத்தி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
4 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
4 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்