சமையல் காஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – உற்பத்தி 30% அதிகரிப்பு என மத்திய அரசு அறிவிப்பு
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை இணை செயலர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். சமையல் காஸ் சிலிண்டர் தொடர்பாக மக்கள் பதற்றமடைய தேவையில்லை என்றும், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் சமையல் காஸ் உற்பத்தி கடந்த 5ஆம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு காஸ் சிலிண்டர்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 25,000 காஸ் விநியோகஸ்தர்களிடமும் காஸ் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை என்றும், தேவையில்லாமல் காஸ் சிலிண்டர்களை சேமித்து வைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் தினசரி ஆன்லைன் முன்பதிவு 55 லட்சத்திலிருந்து 75 லட்சமாக அதிகரித்தாலும் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியா தற்போது 25.8 கோடி மெட்ரிக் டன் சுத்திகரிப்பு திறனை கொண்டுள்ளது என்றும் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் முழுத் திறனுடன் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்