சஞ்சு சாம்சன் சென்னை அணியில்: ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் தற்போது சென்னை அணியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து, இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
மொத்தம் ஐந்து போட்டிகளில் 321 ரன்கள் எடுத்த சாம்சன், 199.37 என்ற உயர்ந்த ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் 19வது பிரிமியர் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணிக்காக அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய ஸ்பின்னர் பியுஷ் சாவ்லா கூறுகையில், சாம்சன் தனிநபராக போட்டியை மாற்றும் திறன் கொண்டவர் என்றும், அவர் சிறந்த பார்மில் இருப்பது சென்னை அணிக்கு மிகப் பெரிய பலம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இளம் வீரர்களுடன் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இணைவதால் இந்த சீசனில் சென்னை அணி சிறப்பாக செயல்படும் என நம்பப்படுகிறது.
முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கூறுகையில், எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் ஆகியோர் இணைந்து விளையாடுவது அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என்றார். இது தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்றும், சென்னை அணி இந்த சீசனில் கோப்பை வென்று அவருக்கு சிறந்த பிரியாவிடை அளிக்க விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்