உடனடி செய்தி

சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை

சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் பணிபுரியும் சில ஊழியர்கள் மற்றும் பூசாரிகளின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சபரிமலையில் செயல்படும் தனலட்சுமி வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைகளில் அங்கு பணிபுரியும் பலர் கணக்குகளை வைத்துள்ளனர். அய்யப்பன் கோவிலில் தங்கம் கொள்ளை போன சம்பவத்திற்குப் பின்னர் பல்வேறு முறைகேடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தற்காலிக ஊழியர்கள், பூசாரிகள் மற்றும் உதவி பூசாரிகளின் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. லஞ்சம் மற்றும் முறைகேடுகள் மூலம் கிடைக்கும் பணத்தை நேரடியாக வைத்திருக்காமல், வங்கி வழியாக பல்வேறு கணக்குகளுக்கு அனுப்பியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சீசனில் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழியாக 1,667 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 8.08 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் தனலட்சுமி வங்கியில் 942 பரிமாற்றங்கள் மூலம் 11.45 கோடி ரூபாய் பரிமாறப்பட்டுள்ளது. மேல் சாந்தி, பூசாரிகள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் என மொத்தம் 18 கணக்குகளில் இந்த பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. சிலர் நெய் விற்பனை தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் தரிசனத்திற்கு உதவி செய்து பணம் பெறுவது, தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து லாட்டரி விற்பனை செய்வது போன்ற தகவல்களும் வெளிவந்துள்ளன. சபரிமலையில் தேவைக்கு அதிகமாக தினக்கூலி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நியமிக்கப்பட்ட தனி அதிகாரி தனது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்