செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறை புகார்: ‘பொய்யான குற்றச்சாட்டு’ என விளக்கம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமூக வலைதளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வருமான வரித்துறை கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ‘சோதனை’ என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சட்டவிரோதமாக தடுத்து வைத்து, அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட விடாமல் செய்ததாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை அவர் ஊடக பேட்டிகளிலும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறையின் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு கமிஷனர் ரஜிதா வெளியிட்ட அறிக்கையில், செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என தெரிவித்தார்.
மேலும், சமீப காலங்களில் செல்வப்பெருந்தகை அல்லது அவருடன் தொடர்புடைய எந்த இடங்களிலும் சோதனை நடத்தப்படவில்லை என்றும், அவரது நகர்வுகளை கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கணக்கில் வராத பணப்புழக்கம் தொடர்பாக வழக்கமான நுண்ணறிவு அடிப்படையிலான சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவை செல்வப்பெருந்தகையுடன் எந்த தொடர்பும் இல்லாதவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பி, அரசுத் துறைக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, செல்வப்பெருந்தகை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்