உடனடி செய்தி

செனாப் நதியில் ரூ.5129 கோடியில் சாவல்கோட் நீர்மின் திட்டம் – மத்திய அரசு வேகம்

செனாப் நதியில் ரூ.5129 கோடியில் சாவல்கோட் நீர்மின் திட்டம் – மத்திய அரசு வேகம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கையாக இந்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே சாவல்கோட் நீர்மின் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திட்டத்திற்காக ரூ.5129 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நீர்மின் கழகம் (NHPC) மார்ச் 12 முதல் ஒப்பந்தப்புள்ளிகளை கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 20ம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படும்.

3285 நாட்களுக்குள் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவேறும் பட்சத்தில், ஜம்மு காஷ்மீரின் மின்சார உற்பத்தி திறன் பெரிதும் உயரும். அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு செனாப் நதியூடாக செல்லும் நீரின் அளவு குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்