உடனடி செய்தி

சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – பெண் பயணி கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – பெண் பயணி கைது

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்னைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியர்களின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சுற்றுலா முடிந்து திரும்பிய நிலையில், அவரது உடைமைகளை சோதனை செய்த போது, தங்க பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 125 கிராம் ஆகும். அதன் சந்தை மதிப்பு ரூ.93 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்