செய்திகள்
⚡ உடனடி செய்தி
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 4,72,319 பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 74,089 பேர் புதிய வாக்காளர்கள் ஆவர்.
இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் நான்கு முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. மொத்தம் 419 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
23ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 83.68% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதாவது 24,21,186 பேர் வாக்களித்துள்ளனர். இதில் பெண்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர்.
மேலும் தபால் ஓட்டுகள் சுமார் 32,000 வரை பதிவாகி உள்ளன.
2021 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த முறை 17,691 ஓட்டுகள் அதிகரித்துள்ளன. ஆனால், 2024 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2.40 லட்சம் ஓட்டுகள் குறைந்துள்ளன.
இந்த தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு ஆர்.கே.நகர் தொகுதியில் 90.56% ஆக பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில், வில்லிவாக்கம், துறைமுகம், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“மக்கள் அதிக அளவில் வாக்களிக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் கடந்த தேர்தலை விட ஓட்டுப்பதிவு உயர்ந்துள்ளது” என தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்