உடனடி செய்தி

சென்னை : பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆறாம் நாளாக குறைவு

சென்னை : பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆறாம் நாளாக குறைவு
சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆறு நாட்களாக குறைந்து வருகிறது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்க அனுமதி அளித்தது. அதை ஒட்டி விலையில் தினமும் மாறுதல் ஏற்பட்டது. சமீப காலமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. இதை ஒட்டி சமூக வலை தளங்களில் மத்திய அரசை குறை கூறி பலரும் விமர்சனம் செய்து வந்தனர். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு குறித்து அவர்கள் கண்டுக் கொள்ளாமல் சென்ற ஆட்சியின் விலையையும் இந்த ஆட்சியின் விலையையும் மட்டும் ஒப்பிட்டு பதிந்து வந்தனர். கடந்த 18 ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.88 ஆக குரைந்தது. அடுத்த நாளான 19 ஆம் தேதியும் அதே விலைக்கு விற்கப்பட்டது. பிறகு 20 ஆம் தேதி முதல் விலை மிக மிக சிறிய அளவில் குறைந்து வருகிறது. டீசல் விலையும் அதைப் போல குறைந்துக் கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை தொடர்ந்து அதிகரித்த போது  குறை கூறிய நெட்டிசன்கள் தற்போது விலை குறைப்பை கண்டுக் கொள்ளாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்