உடனடி செய்தி

டாக்டர்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்கிறது திமுக அரசு – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

டாக்டர்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்கிறது திமுக அரசு – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசாணை எண் 354 அமல்படுத்தப்படாததால் அரசு டாக்டர்கள் நான்கரை ஆண்டுகளாக போராடி வருவதாக அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு இன்று உரிய ஊதியமும், DACP ஊதியமும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை கைது செய்வதும், பணியிட மாற்றம் செய்வதும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும், போராட்டத்தில் உயிரிழந்த டாக்டர் மணிக்குமார் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

அரசு டாக்டர்களின் நலன் பாதுகாக்கப்படாவிட்டால், தமிழக மக்களின் ஆரோக்கியமே பாதிக்கப்படும் என எச்சரித்த அவர், உடனடியாக அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்